பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் பகவான் தேவநாராயணன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
பில்வாரா மாவட்டம் மாலாசேரி டங்கரி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி குர்ஜார் இனத்தவர் வணங்கும் தேவ நாராயணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.
குர்ஜார் இனத்தவரின் வாக்குவங்கியை பெறுவதற்காக பகவான் தேவநாராயணன் அவதரித்த கிராமத்துக்கு மோடி செல்வதாக விமர்சிக்கப்பட்ட போதும், பிரதமரின் வருகையில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று பாஜகவினர் கூறுகின்றனர்.