Vitasta: காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்குமான கலாச்சார தொடர்பு! சென்னையில் 3 நாட்கள் விழா

சென்னை: மத்திய கலாச்சார துறை சார்பாக, காஷ்மீரில் கலாச்சாரம் பண்பாடு மற்றும் அங்கு உள்ள கலைகளை பெருமைகளை சொல்லும் வகையில் VITASTA என்ற தலைப்பில் சென்னை திருவான்மியூரில் உள்ள கலாக்‌ஷேத்ராவில் மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தொடங்கி வைத்தார். நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீரில் பாரம்பரிய உணவுகள்,  உடைகள், அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு கலைப் பொருட்கள் ஆகியவை இங்கே அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்திருக்கின்றன.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காஷ்மீர் பற்றிய பரத நடனம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்கள் நடனம் மிகவும் தத்ரூபமாக இருந்தது என்று சிலாகித்துப் பேசினார். ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இருந்த காஷ்மீர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய ஆர்.என்.ரவி, அது புத்த மதம் பற்றியது மட்டும் அல்ல அதையும் தாண்டி பல விஷயங்கள் இருப்பதாக குறிப்ப்ட்டார்.  

வேற்றுமையில் ஒற்றுமை என்பது அரசியல் வார்த்தை மட்டும் அல்ல அதில் நம் வாழ்வியலும் அடங்கும் என்று கூறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காஷ்மீருக்கும் தமிழ்நாடுக்கும் பல தொடர்புகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். 

சிந்து நதி முதல் காவேரி நதி வரை இந்தியாவில் பல ஆறுகள் உள்ளன, அவை நமது கலாச்சாரதத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு க்கொண்டு செல்கின்றன என்று கூறிய ஆர்.என்.ரவி, காஷ்மீர் வரலாறு பற்றி பல ஆய்வுகள் தேவைப்படுகிறது, அவை பல முக்கிய விஷங்களை வெளியே கொண்டு வரும் என்று கூறினார். நாடு முழுவதும் வேறு வேறு நம்பிக்கைகள் இருக்கலாம் ஆனால் அவை அனைத்தும் ஒன்றே என்று ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

18ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடக இந்தியா இருந்துள்ளது. அதன்பிறகு, ஆகிலேயே ஆட்சி வந்ததால், தான் நாஅம ந்த பெருமையை இழந்தோம் என்று தெரிவித்த ஆர்.என்.ரவி, நமது பாரம்பரிய பெருமையையும், பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடு என்ற பெயரையும் மீட்டு எடுக்க வேண்டும் அதற்கான பணிகளை நாம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

காஷ்மீர் மன்னர் ஹரி சிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க  முடிவு செயத்து இனிமேல் பிரச்சினை வர கூடாது என்பதற்காக தான். ஆனால் அதன் பின்னரும் காஷ்மீர் விவராகரத்தில் பல பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன அவை உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பிரிவினைவாத சக்திகளால் ஏற்பட்டது என்று வருத்தம் தெரிவித்தார்.

அதேபோல இந்தியாவின் சொந்த மக்கள் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நிலை மிகவும் மோசமாக இருந்தது., ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது artical 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்த காஷ்மீரில் பல நல்ல விஷயங்கள் தற்போது நடைபெற்று வருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.