‘பாஜகவிற்கு தைரியம் இருக்கா..?’ – தெலங்கானா முதல்வரின் மகன் காட்டம்.!

ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் முதன்மையில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இருக்கிறார். பாஜக தூக்கி வங்க கடலில் எரிய வேண்டும் எனக்கூறியவர், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் முன்னணியை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

அந்தவகையில் ஹைதராபாத்தில் உள்ள கம்மம் நகரில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற பாரதிய ராஷ்டிர சமிதியின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர், சிபிஎம் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐயின் டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய அரசியலில் கேசிஆர் முன்னேறுவதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்டி குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை (மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம்) மேற்கொண்டு வருவதால் அவர் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என கூறினார்.

நான்கு முதல்வர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்ட உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: “நேற்று பா.ஜ.க.வின் (தேசிய நிர்வாகி) கூட்டம் முடிந்தது. இன்னும் 400 நாட்கள் எஞ்சியிருப்பதாக அவர்களே கூறினர். இந்த அரசு தனது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. 400 நாட்களுக்குப் பிறகு அது நிலைக்காது’’ எனறு அவர் கூறினார்.

இந்தநிலையில் கேசிஆர் மேலும் ஒரு நகர்வை செய்துள்ளார். ஒடிசாவின் முன்னால் முதல்வர் கிரிதர் காமாங் மற்றும் அவரது மகன் சிஷிர் காமாங் உடன் இன்று மேடையை பகிர்ந்து கொண்டார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு ஒடிசாவின் பழங்குடி தலைவரும், முன்னாள் முதல்வருமான கிரிதர் காமாங் கலந்து கொண்டார். தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகிய பின்பு கேசிஆருடன் கைகோர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் தெலங்கான முதல்வரின் மகனும், அமைச்சருமான கேடி ராமா ராவ். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘பாஜக தலைமையிலான அரசு தெலுங்கானாவுக்கு எந்த புதிய நிறுவனத்தையும், நிதியையும் அறிவிக்கவில்லை. ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் மாநிலத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை.

ஆங்கிலேயர்களின் அட்டூழியங்கள் குறித்து ஆவணப்படம் எடுக்காதது ஏன்.?

ரூபாயின் மதிப்பு பாதாளம் நோக்கி நகர்கிறது, கடன் விண்ணை நோக்கி ஏறிக்கொண்டிருக்கிறது. அதுபோன்ற நிலைதான் இன்று நாட்டில் நிலவுகிறது. இந்த அரசாங்கம் அதன் கார்ப்பரேட் நண்பர்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்தது. மாநிலத்தில் பாஜகவில் இருப்பவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள். அவர்களுக்குத் தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுங்கள். பிறகு, நாம் இணைந்து முன்கூட்டியே தேர்தலை சந்திக்கலாம்” என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.