அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர்

ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பன்மொழி படம் ‛தசரா'. இதன் டீசரை எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியிட்டனர். நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தையும், அவர்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்திக்கும் பிரச்னை, அதிலிருந்து எப்படி தங்களை காக்குகின்றனர் என்பதை தொடர்புபடுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரும் அதையே பிரதிபலிக்கிறது.

நானியின் வெறித்தனத்தனமான தோற்றம், அவருடைய குணாதிசயம், பேச்சு, பாவனை, உடல்மொழி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். “தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.