விஜயவாடா: ஆந்திர முதல்வர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆந்திர மாநில ஓய்.எஸ்.ஆர். காங்., முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டில்லி செல்வதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரான போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமான பைலட் தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement