இரட்டை இலை சின்னம் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதிலளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளர் என தான் கையெழுத்திட்டு அனுப்பிய ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரின் பெயரை, இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கடந்த வாரம் முறையிட்டார்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வேட்பாளரின் பெயர் அடங்கிய கடிதத்தை, தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பிடம் வழங்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.