நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர், சாலையோர வீட்டின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கூடங்குளம் சுனாமி காலனியை சேர்ந்த மனோ என்பவர், கடல் தொழில் செய்துவருகிறார்.
இவர் நேற்று கூத்தன்குழியில் இருந்து இடிந்தகரை சுனாமி குடியிருப்பு நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி, சாலையோரம் இருந்த வீட்டின் சுவற்றின் மீது மோதி படுகாயமடைந்தார்.
பொதுமக்கள் மனோவை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.