இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், தங்களது மனைவியரை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மட்டும் வீரர்கள் தங்களது மனைவியரை அழைத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி விரைவில் நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் வீரர்கள் தங்களது மனைவியரை அழைத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற பயணங்களுக்கு அனுமதி மறுப்பு
எவ்வாறெனினும் வீரர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒருநாள் மற்றும் ரி-20 போட்டித் தொடர்களின் போது மனைவியர் வீரர்களுடன் இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீர்ர்கள் குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும் போது ஓய்வு நேரத்தில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் போது வீரர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டதுடன், நட்சத்திர வீரர் தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.