சேலம்: சேலம் மாவட்டம் வீரகனூரில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் எம்பியுமான பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டம் முடிந்தவுடன் பாரிவேந்தரிடம், ஈரோடு இடைத்தேர்தலில் ஐஜேகே ஆதரவு யாருக்கு என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், பாரதிய ஜனதா எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களுக்கு ஐஜேகே ஆதரவு அளிக்கும் என்றார்.