உங்களுக்கு வறண்ட சருமமா? கவலையை விடுங்க.. இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்


பொதுவாக குளிர்காலத்தில் சருமம் வழக்கத்தைவிட அதிக வறட்சியாக இருக்கும்.

இதனால் சருமத்தில் அரிப்பு, செதில் போன்று உதிர்தல், உலர்ந்த திட்டுகள் போன்றவை உண்டாகும்.

இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் இது பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

இதனை போக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகின்றது.

அந்தவகையில் எப்படி வறண்ட சருமத்திற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

உங்களுக்கு வறண்ட சருமமா? கவலையை விடுங்க.. இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும் | Do You Have Dry Skin

தேவையான பொருட்கள்:

  • முல்தானி மட்டி பவுடர் – 2 டீஸ்பூன்
  • பால் – 1 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
  • கிளென்சர் – 1 டீஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

 

  • முகத்தை கிளென்சர் கொண்டு சுத்தம் செய்து உலர வைத்துக் கொள்ளுங்கள். முதலில் முல்தானி மட்டி, பால் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் போல் ஆக்குங்கள்.
  • இந்தப் பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். பின்னர், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் போதும்.
  • இந்த பேஸ் பேக் வறட்சி மற்றும் எண்ணெய் சருமத்திற்கு சிறந்தது. இதில் சேர்க்கப்படும் முல்தானி மட்டி எண்ணெய் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கும்.
  • அதேபோல் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கவும், முகத்தில் உள்ள கருமையை நீக்கி சருமத்தை ஈரப்பதமாக்கும்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.