என் கணவர் மோசமாக கவலைப்படுவதை பார்க்கவே அதை வாங்கினேன்! பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட பதிவு


பிரபல ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்சின் மனைவி, தன் கணவர் கால்பந்து போட்டியை நேரில் காண்பதை பார்த்து மகிழ ஓடிடி தளத்தை வாங்கியதாக கிண்டலடித்துள்ளார்.

ரையன் ரெனால்ட்ஸ்

வேல்ஸின் கிளப் அணியான Wrexham-ஐ பிரபல ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ் மற்றும் அவரது மனைவி பிளேக் லைவ்லி வாங்கினர்.

நேற்று முன்தினம் நடந்த Wrexham – Sheffield United அணிகளுக்கு இடையிலான போட்டியை ரெனால்ட்ஸ் நேரில் கண்டுகளித்தார். அந்த போட்டி 3-3 என டிராவில் முடிந்தது.

ரையன் ரெனால்ட்ஸ்/Ryan Reynalds

@Matthew Ashton – AMA/Getty Images

போட்டியை தன் கணவர் காணும்போது அவரது முகபாவனைகளை பார்க்க வேண்டும் என அவரது மனைவி பிளேக் லைவ்லி, ESPN+ என்ற ஓடிடி தளத்தை வாங்கியிருக்கிறார்.

ரெனால்ட்ஸ் மனைவியின் பதிவு

அதில் கணவர் கொடுத்த முகபாவனைகளை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

அத்துடன், ரெனால்ட்ஸை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டார்.

அவரது பதிவில் ‘நான் என் கணவர் அதிர்ச்சியுடன் கவலையடைவதை நேரலையில் பார்க்க இன்று ESPN+ வாங்கினேன். மதிப்புக்குரியதாக இருந்தது. நீங்கள் இப்போது பைத்தியக்காரத்தனமான @Wrexham afc விளையத்தைப் பார்க்கவில்லை என்றால், இந்த அதிர்வுகளை நீங்கள் இழக்கிறீர்கள். அவர்கள் ஒரு அணியுடன் 3 லீக்குகள் அதிகமாக விளையாடுகிறார்கள். மேலும் தற்போதைய வெற்றிக்கு வாழ்வில் எந்த அர்த்தமும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

ரெனால்ட்ஸ்-Reynalds/-பிளேக் லைவ்லி/Blake Lively

@Mike Coppola/Getty Images

ஆதரவாளர்களுக்கு நன்றி கூறிய ரெனால்ட்ஸ்

ஆனால், ரெனால்ட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘RMcElhenney மற்றும் நானும் இதில் ஈடுபட்டபோது, அது சாத்தியமற்றதாக உணர்ந்தேன்.

ஆனால், சாத்தியமற்றது @Wrexham afc-யின் விருப்பமான நிறம். நான் பார்த்த மிக அற்புதமான விடயங்களில் இதுவும் ஒன்று.

இன்றிரவு அந்த ஆடுகளத்தில் உங்கள் இதயத்தை குறிவைத்து வெளியே வந்த ஒவ்வொரு Wrexham ஆதரவாளர்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். 

பிளேக் லைவ்லி/Blake Lively

@AMIE MCCARTHY/GETTY IMAGES



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.