கடலூர் மாவட்டத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டதில் உள்ள முட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (39). இவரது மனைவி அருணா (32). இந்நிலையில் வாசுதேவன் மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று கடலூர் மாவட்டம் கொரக்கையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்பு அங்கிருந்து வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது ரெட்டகுறிச்சி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, திடீரென எதிரே எதிரே வந்த காரும், இவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வாசுதேவன் மனைவி அருணா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசுதேவன், அவரது உறவினர்கள் மற்றும் மற்றொரு காரில் பயணம் செய்தவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.