சென்னை: காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு ஆளுநரும், முதல்வரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காந்தியும் உலக அமைதியும் என்ற புகைப்பட கண்காட்சியையும் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் திறந்து வைத்தனர்.