`காந்தியும் உலக அமைதியும்’ புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த தமிழ்நாடு ஆளுநர், முதல்வர்!

காந்தியடிகளின் 76 ஆவது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா காந்தியடிகளின் 76 ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது; திருவுருவ சிலையின் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காந்தியின் திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
image
அதனைத் தொடர்ந்து `காந்தியும் உலக அமைதியும்’ என்ற புகைப்பட கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்து, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிட்டனர். இந்த புகைப்படக் காட்சியில் உலகம் முழுவதும் காந்தியடிகள் பயணம் செய்த அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
image
மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபா காந்தி, யாகூப் ஹாசன் மற்றும் ஜி.ஏ.நடேசன் ஆகியோர் 1915 ஏப்ரல் மாதம் எடுத்த புகைப்படமும், 1925 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடந்த மாபெரும் கூட்டத்தில் மகாத்மா காந்தி உரையாற்றிய புகைப்படமும், 1925 ஆம் ஆண்டு கன்னியாகுமரி கடலில் மகாத்மா காந்தி நீராடும் புகைப்படங்கள் இந்த காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இந்தியா என்னும் உயர்ந்த சிந்தனையைக் கட்டமைக்கத் தனது உடல் – பொருள் என அனைத்தையும் ஈந்து இந்நாட்டின் உயிராகிப் போனவர், அண்ணல் காந்தியடிகள். pic.twitter.com/9WzTsuoNBi
— M.K.Stalin (@mkstalin) January 30, 2023

மேலும் காந்தியின் புத்தகங்களை வைத்து ஒரு செல்பி பாயிண்ட்டும் இந்த புகைப்படக் காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சுவாமிநாதன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.