பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
புடின் விடுத்த மிரட்டல்
பிரித்தானியாவில் வைத்தே ஏவுகணையால் தாக்கி கொல்ல சில நிமிடங்கள் ஆகாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தமக்கு தனிப்பட்டமுறையில் கொலை மிரட்டல் விடுத்ததாக போரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியிருந்தார்.
Credit: East2West
2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் முன்னர் போரிஸ் ஜோன்சனுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது புடின் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், போரிஸ் ஜோன்சனின் இந்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov தெரிவிக்கையில்,
ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது. வெளிப்படையான கூற வேண்டும் என்றால் அது வடிகட்டிய பொய்.
போரிஸ் ஜோன்சனின் கருத்து, தற்போது மிக மோசமான ஒரு சூழலை இரு நாடுகளுக்கும் நடுவே உருவாக்கியுள்ளது என்றார்.
60 நொடிகளில் முடிந்துவிடும்
வேறு உலகத் தலைவர்களுடன் விளாடிமிர் புடினின் உறவு எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த போரிஸ் ஜோன்சன்,
ஒருகட்டத்தில் புடின் தம்மை மிரட்டியதாகவும், போரிஸ் உங்களை காயப்படுத்தும் நோக்கம் தமக்கில்லை எனவும், ஆனால் ஒரு ஏவுகணை போதும், வெறும் 60 நொடிகளில் முடிந்துவிடும் என புடின் கூறியதாக போரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ளார்.
Credit: East2West
உக்ரைன் மீதான படையெடுப்பு பேரழிவில் முடியும் என தாம் புடினை எச்சரித்த நிலையில், பதிலுக்கு புடின் தம்மை மிரட்டியதாகவும், மிகவும் சாதாரணமாக அதை அவர் முன்னெடுத்தார் எனவும் போரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியிருந்தார்.