வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: கோரக்நாத் கோயிலில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜன.,30) தீர்ப்பு அளித்துள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் கோயிலில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தாக்குதல் நடைபெற்றது. அப்போது ஆயுதங்களுடன் நுழைந்த ஒருவர், போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். அவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட முர்டாசா அப்பாஸாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அரிவாளுடன் வந்த அவர், போலீசாரை தாக்கி துப்பாக்கியை கைப்பற்ற திட்டமிட்டுஇருந்ததும், மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
அவரது ‘மொபைல் போன், லேப்டாப்’ உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையோருக்கு 8.5 லட்சம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மரண தண்டனை:
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் இவர் நீண்ட காலம் தொடர்பில் இருந்தும் தெரிய வந்தது. இந்நிலையில் குற்றவாளி முர்டாசா அப்பாஸிக்கு மரண தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜன.,30) தீர்ப்பு அளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement