'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத்
பாலிவுட்டின் பிரபல நடிகையான கங்கனா ரணவத் தற்போது தமிழில் 'சந்திரமுகி 2' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் 'தாம் தூம், தலைவி' படங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம் இது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் கதாநாயகி கங்கனா கொடுத்துள்ளார். “சந்திரமுகி 2' படத்திற்காக கலா மாஸ்டர்ஜியுடன் கிளைமாக்ஸ் பாடலுக்கான ரிகர்சலை ஆரம்பித்துள்ளோம். கோல்டன் குளோப் வின்னர் கீரவாணி ஜி இசையமைத்துள்ள பாடல். சாதனையாளர் பி.வாசுஜி இயக்கத்தில்… அத்தகைய மரியாதை…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கங்கனாவின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நீக்கியிருந்தது. சமீபத்தில்தான் கங்கனாவின் கணக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து தன் கணக்கில் பலவிதமான கருத்துக்களை மீண்டும் பதிவிட்டு வருகிறார் கங்கனா.