பனி கடுமையாக இருந்த நிலையில் சென்னையில் திடீரென பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
முன்னதாக சென்னை வானிலை மையம், தமிழகத்தில் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி கனமழை பெய்யும் எனவும் தெரிவித்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணித்திருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் சென்னை நகர் பகுதிகளில் காலை லேசான மழை பெய்துள்ளது. அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர், போரூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைந்து நாளை மறுநாள் இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
newstm.in