ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. ஜி20 மாநாட்டில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த மாநாடு நடைபெறுவதை அடுத்து மூன்று நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை முதல் பிப். 2ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தங்குமிடம், பயணம் செய்யும் வழித்தடம் ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.