சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரியில் தலித் இளைஞன் பிரவீன்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி இரவு அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த இடைநிலை சமூகத்தை சேர்ந்தவர் பிரவீன் குமாரை தடுத்தி நிறுத்தியுள்ளனர். அதற்கு எதிர்வினையாற்றிய இளைஞர், கோயில் என்பது 18 பட்டிக்கும் சொந்தமானது தானே? நான் ஏன் உள்ளே போகக்கூடாது என்று கேட்டுள்ளார்.
இந்த விஷயத்தை அந்த இடைநிலை சமூகத்தை சேர்ந்தவர்கள்
திமுக
ஒன்றிய செயலாளரும், திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவரிடம் கூறியுள்ளனர். அவர் உடனே பஞ்சாயத்து கூட்டி தலித் இளைஞரை பெற்றோருடன் வரச்சொல்லி பெற்றோர் கண்முன்னே கேட்கக்கூடாது கேள்விகளை கேட்டு அவமானப்படுத்தியுள்ளார். ஆதிக்க சாதியினரின் கண்முன்னே ஒடுக்கப்பட்ட இளைஞரை மேலும் புண்படுத்தி வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட மாணிக்கத்தை திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியுள்ளது.
ஆனால், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஒரு கண்டன ட்வீட் கூட போடாமல் இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுக கட்சி அந்த நபரை தற்காலிகமாக நீக்கியிருப்பது சமூக நீதி பேசும் கட்சியை கேலி செய்யப்படும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்வினையாற்றியுள்ளார். அதில் அவர், ஒரு திமுக எம்பி நேற்று கோயில் இடிப்பு சம்பவத்தில் பெருமைப்பட்டுக் கொண்டார், இன்று சேலம் மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலர் ஒருவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதைக் காண்கிறோம். சமூக நீதிக்கு திமுகதான் நமக்கெல்லாம் ஒரு மாடல்” என்று விமர்சித்திருந்தார். இதனை அடுத்து நடிகை கஸ்தூரி இதுகுறித்து ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர்,
”இந்த கொடுமை நடந்து 10 நாளு ஆகுதாம். திமுக விசிக லாம் கண்டுக்கவேயில்ல. எந்த முன்களப்பு மீடியாவும் செய்தி போடல. ஏன்னா பார்ப்பனீயம், பானிபூரின்னு யாரையும் திட்ட முடியல. இன்னிக்கு வீடியோ வைரல் ஆனதும் திமுக சம்பந்தப்பட்டவரை ‘தற்காலிகமாக ‘ நீக்கி சமூக நீதியை காப்பாத்திட்டாங்க.
இதான் இவங்க நடத்துற திராவிடமாடல் அறநிலையத்துறை லட்சணம். collection, election ரெண்டுக்குதான் கோயில் பக்கமே HRCE வருவாங்க. ஆனா கடவுள் இல்லைனு சொல்றவங்க ரெகுலர் ஆ சத்ருசம்ஹார யாகம் பண்ணுவாங்க. ஜாதி பாக்குறவன மன்னிக்கலாம், ஜாதி இல்லைனு ஊருக்கு உபதேசம் செய்யுறவன விடவே கூடாது” என இவ்வாறு குறிப்பிட்டு திமுகவை சாடியுள்ளார்.