வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: ஜி 20 கூட்டத்தால், 2 லட்சம் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருவார்கள் என மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் கூறியுள்ளார்.
சண்டிகரில் நடந்த சர்வதேச நிதிக் கட்டிக்கலை பணிக்குழு துவக்க கூட்டத்தில் மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் பேசியதாவது: ஜி 20 தலைமையின் கீழ் நாட்டில் நிகழ்ச்சிகளை நடத்துவது பெருமை. அது மகிழ்ச்சியின் தருணம். நாட்டில் 50 மேற்பட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட ஜி 20 கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதனால் 2 லட்சம் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருவார்கள்.
ஆரம்பத்தில் டில்லி, பெங்களூரு அல்லது ஐதராபாத் போன்ற இடங்களில் கூட்டங்களை நடத்த முயற்சி செய்தோம். ஜி 20 கூட்டங்களில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அனைத்து பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள். கூட்டங்களில் நாட்டின் தொழில் நுட்பங்கள், உள்கட்டமைப்பு, கல்வி குறித்த தகவல்கள் இடம்பெறும். இவ்வாறு அரவ் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement