தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்சியடைந்துள்ளது.
கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை ரூபாய் 300 முதல் 350 வரை குறைவடைந்துள்ளதுடன், லீக்ஸ் மற்றும் கெரட் ஆகியவற்றின் மொத்த விலை ரூபாய் 90 முதல் 150 வரை குறைந்துள்ளது.