நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி நண்பரை மணப்பதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு நடிகையின் தாயார் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார், நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்தார்.
அதன் பின்னர் விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து பிரபலமானார். மேலும், தெலுங்கு படங்களிலும் நடித்து தேசிய விருது பெறும் நடிகையாக மாறினார். தற்போது மாமன்னன், தசரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி நண்பரை காதலிப்பதாகவும், காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் பரவியது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.
கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா திருமணம் குறித்து செய்தியை மறுத்துள்ளார். இது முழுக்க முழுக்கப் பொய்யான செய்தி, இது போன்ற செய்தியை பார்க்கக் கூட விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கீர்த்தியின் திருமணம் தொடர்பான செய்திகளுக்கு இதுதான் பதில், இது தொடர்பாக பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதே போல் பல முறை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
newstm.in