நல்லா வச்சீங்கடா பேரு… மயக்கி பணம் பறிக்கும் மேனகா பொண்ணு..! அப்போம் முருகன்..! இப்போம் முகமது..!

தேனி கணபதி சில்க்ஸ் உரிமையாளர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கடைக்குள் போராட்டம் நடத்திய மேனகா, 52 வயது ஓட்டல் அதிபரை 2ஆவது திருமணம் செய்வதாக கூறி 10 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி கணபதி சில்க்ஸ் கடைக்குள் அமர்ந்து உரிமையாளர் முருகன் தன்னை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றியதாக வீராப்பாக போராட்டம் நடத்திய மேனகா இவர் தான்..!

இந்த புகாரில் முருகன் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், மேனகா தன்னிடம் பல கோடி பணம்.கேட்டும் சொத்துக்களை எழுதிக் கேட்டும் மிரட்டியதாக முருகன் புகார் தெரிவித்தார்… அப்போது அது பெரிதாக கவனிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மேனகா கும்பல் கம்பத்தை சேர்ந்த முகமது ரபீக் என்ற 52 வயது ஓட்டல் அதிபரை தங்கள் காதல் வலையில் விழவைத்து 10 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்தது அம்பலமாகி உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

மனைவி இறந்த பின்னர், தனிமையில் இருந்த முகமது ரபீக்கை ஜீவா மற்றும் சத்யா என்ற பெண்கள் மூலம் மேனகா காதல் வலை வீசி உள்ளார். தன்னுடைய புகைப்படங்களை அரையும் குறையுமாக அனுப்பி மயக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வீடியோகாலில் வில்லங்கமாக தோன்றி ரபீக்கை மயக்கி லட்சக்கணக்கில் பணம் கறந்துள்ளதாக கூறப்படுகின்றது. ரியல் எஸ்டேட்டில் தனக்கு பெரிய தொகை வர இருப்பதை சொன்னதும் ஒட்டு மொத்தமாக 10 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு மேனகாவும், அவரது கூட்டாளிகளான ஜீவா, சத்யா ஆகிய இருவரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானதாக முகமது ரபீக் அளித்த புகாரின் பேரில், பிளாக்மெயில் மேனகா உள்ளிட்ட 3 பேர் மீதும், கம்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தனது வாழ்க்கையே போய்விட்டது என்று அன்று கணபதி சில்க்ஸ் கடைக்குள் கலாட்டா செய்த மேனகா போலீசுக்கு பயந்து தப்பி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவரை பிடித்து விசாரித்தால் மேனகாவின் பின்னணியில் உள்ள மோசடி கும்பல் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.