புதுச்சேரி: ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் ஜி-20 மாநாட்டின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, யூரோப் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஜி 20 ன் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அஷூதோஷ் சர்மா பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜி20 என்பது உலகின் தலைசிறந்த அமைப்பாக உள்ளது. இன்றைக்கும் நாளைக்கும் மிகப் பெரும் பிரச்னைகளாக இருக்கின்ற பருவ நிலை மாறுதல், பெருந்தொற்றுப் பரவல், எரிசக்தி பாதுகாப்பு, நீர் மேலாண்மை, உணவு பற்றாக்குறை போன்றவற்றை ஒரே ஒரு நாடு மட்டும் தன்னளவில் தீர்த்து கொள்ள முடியாது. இதற்கு பல நாடுகளின் ஒத்துழைப்பும் நட்புறவும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement