பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை 4 லட்சத்து 40ஆயிரம் பேர் வாங்கவில்லை: கூட்டுறவுத்துறை அறிக்கை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1,000 ரூபாயை 4 லட்சத்து 40,000 பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகை ரூ.1,000, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டது. பொங்கல் பரிசு ரூ.1000-ஐ பெரும்பாலான மக்கள் வாங்கினாலும், ஒருசிலர் பணம் வேண்டாம் என்று இருந்துவிட்டனர். 4.40லட்சம் பேர் ஆயிரம் ரூபாயை வாங்காததால் 743.96கோடி பணம் அரசுக்கு திரும்பி வந்தது என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.