காஞ்சிபுரத்தில், மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவரை சரமாரியாகத்தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு, கஞ்சா போதையிலிருந்த கார்த்திக் என்பவனை, விக்ரம், யாசர், யாசரின் 17 வயது தம்பி ஆகியோர் கூட்டாளிகளுடன் சென்று, கண்மூடித்தனமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
மூச்சு பேச்சில்லாமல் மயங்கிய கார்த்திக்கை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விக்ரமையும், யாசரையும் கைது செய்த போலீசார், 17 வயது சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.