மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை… விமான எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி!!

இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாக்பூர் – மும்பை இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்ததாக பைலட்டுக்கு பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பயணிக்கு உரிய முறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவசரகால கதவை சேதப்படுத்தியதற்காக அந்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தை பாதுகாப்பாக இயக்குவதில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் இந்த விவகாரத்தில் இண்டிகோ நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. அண்மை காலமாக விமானத்தின் அவசர கால கதவை திறப்பது அதிகரித்து வருகிறது.

முன்னதாக கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், பின்னர் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்தார். தேஜஸ்வி சூர்யா தவறுதலாக கதவை திறந்துவிட்டார் என்றும், பிறகு அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்.

தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தற்போது அதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.