நீலகிரி: யானை மனித மோதல்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் 5 முகாம்களை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் அம்ரித் முடிவு செய்துள்ளார். அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து மக்களுக்கு எச்சரிக்கை அளிக்க ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை கருவிகள் மூலம் யானை வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.