பிரித்தானிய பாராளுமன்ற மேல் சபையில் மசோதா வாசிக்கப்படும்போது சுற்றுச் சூழல் ஆர்வலர் குழு திடீரென கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேல்சபை மசோதா
பிரத்தானிய பாராளுமன்றத்தின் மேல் சபையான House of Lords-யில், காலநிலை ஆர்வலர்கள் பயன்படுத்தும் கொரில்லா உத்திகளை ஒடுக்குவதற்கு புதிய எதிர்ப்பு சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, Extinction Rebellion என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவின் 12 உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் ”மனித உரிமைகளைப் பாதுகாப்போம்” என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை வாயை மூடுங்கள் என்று கூறி அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றினர்.
இந்த இடையூறினால் மேல்சபை ஐந்து நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் பாராளுமன்ற மேல்சபையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அதன் பின்னர் மசோதா வாசிக்கப்பட்டது.
அதில், சாலைகளைத் தடுக்கும் அல்லது மெதுவாக அணிவகுத்து செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்படும் என்று அரசு கூறியது.
Extinction Rebellion
மேலும் இந்த மசோதாவின் திருத்தங்கள், சமீபத்திய மாதங்களில் சாலையிலும் பிற இடங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்திய Extinction Rebellion, Just Stop Oil மற்றும் Insulate Britain ஆகியவற்றால் பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் பொதுமக்களின் இடையூறுகளை இலக்காகக் கொண்ட செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக Extinction Rebellion அறிவித்தது.
ஏப்ரல் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஒரு லட்சம் பேரைக் கூட்டுவதற்கு காலநிலை நடவடிக்கைக் குழு இலக்கு வைத்துள்ளது.