வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவருக்கு 150,000 டொலர்கள் கிடைத்தன. ஆனால், அந்த சம்பவம் சந்தோஷத்தில் முடிவதற்கு பதிலாக தொல்லையில் முடிந்தது.
வீட்டை இடிக்கும் பணியின்போது கிடைத்த பணம்
அமெரிக்காவிலுள்ள Cleveland என்ற இடத்திலுள்ள விடு ஒன்றை இடிக்கும் பொறுப்பை Amanda Reece என்ற ஒப்பந்ததாரர் ஏற்றிருந்தார்.
அவரது பணியாளரான Bob Kitts என்பவர் வீட்டை இடித்துக்கொண்டிருக்கும்போது, குளியலறை சுவருக்குள் இரண்டு பெட்டிகளில் கவர்களுக்குள் பணம் இருப்பதைக் கண்டுள்ளார்.
உடனடியாக அவர் Amandaவுக்கு தகவலளிக்க, இருவருமாக அந்தக் கவர்களில் இருந்த பணத்தை எண்ணியிருக்கிறார்கள். அந்தக் கவர்களில் 157,000 டொலர்கள் இருந்துள்ளன.
Image: The Interiors Addict
அதை நாம் பிரித்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் Bob. ஆனால் Amandaவுக்கோ பணத்தை Bobஉடன் பங்கிட்டுக்கொள்ள மனமில்லை. ஆகவே, பணத்தை வைத்துக்கொண்டு தூங்காமல் பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டிருந்திருக்கிறார் அவர்.
தனக்கு 40 % தருமாறு Bob கேட்க, Amanda 10 %தான் தருவேன் என்று கூற, பிரச்சினை நீதிமன்றம் சென்றுள்ளது.
கடைசியில் கிடைத்த தொகை
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், கிடைத்த கவர்களில் ஒன்றின்மீது P. Dunne, Newspaper & Magazine Distributor, இந்த பணத்தை 1545 Superior Ave., N.E., Cleveland, Ohio, என்ற முகவரியில் சேர்க்கவும் என்று எழுதப்பட்டுள்ளது.
ஆகவே, அந்த கவரில் இருந்த தொகையை P. Dunne நிறுவனத்தின் வாரிசுகளுக்குக் கொடுக்க உத்தரவிட்ட நீதிபதி, மற்ற கவரிலிருந்த தொகையை Bobம் Amandaவும் பிரித்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்துள்ளார்.
ஆனால், அந்தப் பணத்தில் பெரும்பகுதியை Amanda ஏற்கனவே செலவு செய்துவிட்டார். ஆக, கடைசியில் Bobக்கு 2,700 டொலர்களும், அவரது சட்டத்தரணிக்கு 2,700 டொலர்களும் மட்டும் கிடைத்துள்ளன.
Dunne நிறுவனம் சார்பில் வழக்கில் பங்கேற்ற சட்டத்தரணி இந்த வழக்கு குறித்துக் கூறும்போது, இது பேராசையால் வந்த பிரச்சினை என்கிறார். பணம் கிடைத்ததும் அந்த இருவரும் உட்கார்ந்து பேசி அதை தங்களுக்குள் பிரித்துக்கொண்டிருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது என்கிறார்.
Dunne நிறுவனத்தின் வாரிசுகளுக்கு இப்படி ஒரு விடயம் நடந்ததே தெரிந்திருக்காது. பேராசையால் Bob, Amanda ஆகிய இருவருமே இழந்துவிட்டார்கள் என்கிறார் அவர்.
Image: The Interiors Addict