பதாம் திரைப்படம் மாபெரும் ஹிட்டானதை அடுத்து ரசிகர்கள் பலரும் நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன் குவிந்தனர். அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்து ஷாருக்கான் நன்றி தெரிவித்தார்.
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பதான் படத்தை சர்ச்சை சுற்றிக் கொண்ட போதிலும் அதையெல்லாம் கடந்து தற்போது வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ஷாருக்கானின் பதான்.
இந்திய அளவில் இந்தப் படம் 4 நாட்களில் ரூ.200 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டின் முன்பு ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனையடுத்து ஷாருக்கான் வீட்டில் மாடிக்கு வந்த ரசிகர்களுக்கு கையைத்து படத்தை வெற்றி பெற செய்ததற்கு நன்றி தெரிவித்தார். பறக்கும் முத்தம் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
newstm.in