2022ஆம் ஆண்டுக்கான போகத்தில் ஒரு ஹெக்டேருக்கு மூவாயிரத்து 207 கிலோ நெல் விளைச்சல் பதிவாகியுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு சிறுபோகத்தில் யூரியா உரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் பின்னர், ஐந்து லட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டயரில் நெல் பயிரிடப்பட்டது.
இதன்படி, 10 வருடங்களின் பின்னர், 2022ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நாட்டில் அதிகளவு நெல் பயிரிடப்பட்டது. அத்துடன் பெறும்போகத்தில் வழங்கப்படும் யூரியா உரத்தின் தரம் அதிகமாக இருந்ததால் விளைநிலங்கள் வளமாக இருந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான நெற்செய்கைக்கு மேலதிகமாக மேலதிக பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன் கீழ் மக்காச்சோளம், மிளகாய், கௌபீ, எள் போன்ற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நிவாரணத் திட்டம் ஆரம்பிக்கப்படும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.