முகேஷ் அம்பானி – நீட்டா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி.
ஆனந்த் அம்பானி
ஆனந்திற்க்கும் ராதிகா மெர்ச்சன்டிற்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனந்த் முன்னர் மிகவும் பருமனான உடல்வாகுடன் இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் எடையை இளைத்தார்.
ஆனால் சமீபகாலமாக மீண்டும் உடல் எடை அதிகமாகி பருமனானார்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆனந்தின் பழைய புகைப்படங்களுடன் தற்போதைய புகைப்படங்களை ஒப்பிட்டு பலர் ஆனந்தின் உடல் எடை அதிகரித்தது குறித்து பதிவிட்டு வந்தனர்.
zoomtventertainment
மீண்டும் அதிகரித்த உடல் எடை
இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் உடல் எடை அதிகரித்ததற்கு காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
2016 ஆம் ஆண்டில் 18 மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு காரணமாக ஆனந்த் அம்பானி 108 கிலோ உடல் எடையை குறைத்தார்.
இச்சூழலில் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற்று வரும் ஆனந்த் அம்பானி உடல் எடை மீண்டும் அதிகரிக்க, அவர் எடுத்துக் கொள்ளும் ஸ்டெராய்டு மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன