புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் 15 ஆண்டுக்கு மேற்பட்ட பழமையான 9 லட்சம் அரசு வாகனங்களை நிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்பாட்டில் இருந்து நீக்கப்படும். அவைகளுக்கு பதிலாக, மாற்று எரிசக்தியில் இயங்கக் கூடிய புதிய வாகனங்கள் கொண்டு வரப்படும்.
மேலும் எத்தனால், மெத்தனால், பயோ சிஎன்ஜி, பயோ எல்என்ஜி மற்றும் எலக்ட்ரிக் போன்ற மாற்று எரிபொருள் வாகனங்களை ஊக்குவிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார். முன்னதாக, 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை இயக்க கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன் அடிப்படையில், பழைய வாகனங்களை நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.