முதல் முறையாக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட வு20 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணியினர் 17.1 ஓவரில் 68 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
69 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் 14 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றனர்.