வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: அடுத்தாண்டு (2024) பிரான்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீர்ர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் , பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024ல் நடக்கவுள்ளது. இதற்கு முன், 1900, 1924ல் நடத்தப்பட்டது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியை மூன்றாவது முறையாக நடத்தும் 2வது நகரம் என்ற பெருமை பெற உள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதால், ரஷ்யாவிற்கு எதிரான நாடுகள் போரை நிறுத்த முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலென்ஸ்கி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உக்ரைன் மீது போர் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. வரப்போகும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க பிரான்ஸ் அரசு தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பிரான்ஸ் பரிந்துரை கடிதம் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement