தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராம். இவர் இயக்கத்தில் வெளியான படங்களுக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ராம் இயக்கத்தில், கடைசியாக மம்மூட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் நடிப்பில் பேரன்பு படம் வெளியானது. பல்வேறு சர்வதேச விருது விழாக்களில் கலந்து கொண்டு இந்த படம், விமர்சனரீதியாகவும் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.
பேரன்பு டத்துக்குப் பிறகு படம் எதுவும் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தினார் ராம். கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் ராம். தற்போது நிவின் பாலி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்தப்படம் உருவாகி வருகிறது. ராமின் முந்தைய படங்களை போல இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு ‘ஏழு கடல் ஏழு மலை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது.
Pathu Thala: ‘பத்து தல’ படத்தின் வெறித்தனமான அப்டேட்: மாஸ் காட்டும் சிம்பு.!
இந்நிலையில் ராமின் புதிய படத்தில் சிவா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தமிழ்ப் படம்’ மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான சிவாவை ராம் இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Jailer: 30 வருடங்களுக்கு பின் இணையும் கூட்டணி: மாஸ் நடிகரை களமிறக்கிய நெல்சன்.!
மிர்ச்சி சிவாவை பொறுத்தவரை தொடர்ச்சியாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் ராமை பொறுத்தவரை அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களையே இயக்கி வருகிறார். நேரெதிரான இவர்கள் இருவரும் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.