டெல்லி: பெசாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். மசூதியில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 85பேர் பலியான நிலையில் 100பேர் காயம் அடைந்துள்ளனர்.