விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலை தடுப்புகளை இடித்து தள்ளிக் கொண்டு வந்து சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர்களை மீது மோதியம் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிவனணைந்தபுரம்விளக்கில் உள்ள காவலர் சோதனை சாவடியில் பணியிலிருந்த மாரீஸ்வரன், வீரசிங்கம் ஆகியோர் சோதனை சாவடிக்கு வெளியே சேரில் அமர்ந்திருந்தனர்.
அப்போது மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் மோதியதில் தீப்பொறி பறந்த சாலைத்தடுப்புடன் வந்து காவலர்களையும் இடித்து தள்ளியது.
இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த காவலர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கார் ஓட்டுநர் முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில், அவர் அதிக அளவு மதுபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.