ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை சீரழித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிராஜ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் சசிராஜுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு சசி ராஜ் ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சசிராஜை கைது செய்யனர்.
இந்த நிலையில் இந்த வாழ்க்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் சசிராஜுக்கு 4000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.