கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களுக்காக வீடியோ மோடை கொண்டு வந்துள்ளது மெட்டா. இது இந்த செயலியில் புதிய கேமரா மோட் என்றும் சொல்லப்படுகிறது.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வீடியோ மோட் கொண்டு வரப்பட்டுள்ளது.
வீடியோ மோட்: வாட்ஸ்அப் பயனர்கள் அந்த செயலியில் உள்ள கேமரா ஆப்ஷன் மூலமாக வீடியோ ரெக்கார்ட் செய்ய வேண்டுமென்றால் கேமரா பட்டனை ஹோல்ட் செய்தபடி அழுத்தி பிடிக்க வேண்டி உள்ளது. அதற்கு மாற்றாக வந்துள்ளது இந்த புதிய கேமரா மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய வகையில் போட்டோ மற்றும் வீடியோ மோடுகளுக்கு எளிதில் ஸ்விட்ச் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். வீடியோ பதிவு செய்ய கேமரா பட்டனை ஹோல்ட் செய்ய வேண்டியது இல்லை. இந்த அம்சத்தை பெற பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் அப்டேட் செய்தால் போதும்.