வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் , ஆந்திரா மற்றும் தெலுங்கானா என பிரிக்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திர தலைநகராக அமராவதி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மார்ச் மாதம் விசாகப்பட்டினத்தில், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பார்வையிட்டார்.
அப்போது, ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில்: வரும்நாட்களில், தலைநகராக மாற உள்ள விசாகப்பட்டினத்திற்கு உங்கள் அனைவரையும் அழைப்பு விடுக்கிறேன். நானும் விசாகப்பட்டினத்திற்கு வரும் மாதங்களில் மாற உள்ளேன் எனக்கூறினார்.
ஜெகன் மோகன் முதல்வராக பதவியேற்றதும், மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் செயல்படும் என அறிவித்தார். இதன்படி, நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினமும், நீதித்துறை தலைநகராக கர்னூலும், சட்டசபை நடக்கும் இடமாக அமராவதியும் இருக்கும் என அறிவித்து அதற்கான சட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் அதனை திரும்ப பெற்று கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement