புதுடெல்லி: உலகளவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில்கொண்டு வரும் 2023ல் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஐநா வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஏற்கனவே கடந்த 2022ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக கணிக்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீமாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியானது 2022ல் 6.8 சதவீதத்தில் இருந்து 2023ல் 6.1 சதவீதமாக குறையும்; மீண்டும் 2024ல் 6.8 சதவீதமாக உயரும்’ என்று கூறியுள்ளது.