இந்திய நாட்டில் இருக்கும் அதிக மாசு கொண்ட ஆறுகளின் பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி 2022 ஆம் வருடத்திற்கான அறிக்கை சமீபத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு 2019 ஆம் வருடத்திலும் அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், வெளியான அருகில் இந்தியாவில் இருக்கும் 28 மாநிலங்களில் ஏழு யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 311 மாசு கொண்ட ஆறுகள் கணக்கில் எடுக்கப்பட்டது. இந்த 311 ஆறுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
பயாலஜிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட் எனும் ஆய்வு முறைப்படி நடந்த இந்த ஆய்வில் ஒரு நதியில் இருந்து ஒரு லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு தூய்மையான தண்ணீராக அதை மாற்றப்படுகின்ற தேவையான ஆக்சிஜனின் அளவை பொறுத்து கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் இருக்கின்ற ஆறுகளில் கூவம் நதி தான் மிக அதிக மாசு கொண்ட நதி என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கூவம் நதியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு லிட்டர் நீரை தூய நேராக மாற்ற 345 மில்லி கிராம் ஆக்ஸிஜன் தேவைப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திமுக அமைச்சர் இந்த ஆற்றை திராவிட மாடல் ஆட்சியில் இதை லண்டன் தேம்ஸ் நதி போல மாற்ற போவதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.