ஈரோடு கிழக்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக இருந்து வரும் கார்த்திகேயன் மற்றும் அவருடைய அண்ணன் கௌதம் ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். ஈரோடு மாநகர் கிருஷ்ணசாமி வீதியில் வசித்து வருபவர் மகேஸ்வரிக்கும் இவருடைய சகோதரர் ஆறுமுகசாமிக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
தனது அக்கா மகன்களான கௌதம் மற்றும் கார்த்திகேயனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஆறுமுகசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து மகேஸ்வரியின் வீட்டிற்கு நேரில் வந்த ஆறுமுகசாமி தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது அக்கா மகன்களான கௌதம் மற்றும் கார்த்திகேயன் இருவரையும் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி ஆறுமுகசாமி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மறைவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருயிர் தம்பி லோ.கார்த்திகேயன் மற்றும் அவருடைய உடன் பிறந்த அண்ணன் கௌதம் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரும் அடைந்தேன்.
தம்பி கார்த்திகேயனின் ஈழப் என்பது வளர்ந்து வரும் தமிழ் தேசிய அரசியல் களத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். தம்பியின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கட்சி உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன். தம்பிகள் இருவருக்கும் எனது கண்ணீர் வணக்கம்.
தம்பி கார்த்திகேயன் மற்றும் அவருடைய சகோதரர் படுகொலைக்கு காரணமானவர்களையும் அதன் பின்னணியில் உள்ளவர்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருயிர் தம்பி லோ.கார்த்திகேயன் மற்றும் அவருடைய உடன் பிறந்த அண்ணன் கௌதம் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரும் அடைந்தேன். (1/3) pic.twitter.com/NXU3QjmBjj
— சீமான் (@SeemanOfficial) January 31, 2023