என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு


தனது குழந்தைகள் தாங்களே உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்காக, பிரித்தானிய கோடீஸ்வரர் ஒருவர் செல்வத்தில் 99 சதவீதத்தை தானமாக வழங்க திட்டமிட்டுள்ளார்.

கடினமாக உழைக்கவும் திறமைகளை வளர்க்கவும் குழந்தைகளை ஊக்கப்படுத்த சிறந்த வழி எது? என்றால், ஒன்று அவர்களுக்கு வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுப்பது, மற்றொன்று வாழ்க்கையில் எல்லா விடயங்களும் எளிதாக கிடைக்கச்செய்யாமல் இருப்பது.

சுயமாக உழைத்து கோடீஸ்வரரானவர்

சுயமாக உழைத்து கோடீஸ்வரரான, பிரித்தானியரான டேவ் ஃபிஷ்விக் (Dave Fishwick), தனது சொத்துக்களில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்குவதாகவும், இதனால் தனது குழந்தைகள் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு | Uk Millionaire Plans Donate All Wealth When DiesITV

உழைக்கும் கோடீஸ்வரர் 2008 நிதி நெருக்கடியின் போது தனது சொந்த வங்கியைத் தொடங்கி பிரபலமானவர்.

Burnley Savings and Loans எனும் அவரது நிறுவனம் உள்ளூர் வணிகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும் ஒரு சமூக வங்கியாகும்.

தொடக்க காலத்தில் மினிபஸ்களை விற்று வந்த ஃபிஷ்விக், விரைவில் தனது திறனை உணர்ந்து நிதித்துறைக்கு சென்றார். இப்போது, மிகப்பெரிய கோடிஸ்வரர்களில் ஒருவராக உள்ளார்.

அனைத்து செல்வத்தையும்.,

இப்போது, இத்தனை ஆண்டுகளாக அவர் சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் தான் இறந்த பின்னர் தனமான கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

ஆம், அவர் தனது குழந்தைகளுக்கு எதையும் விட்டுவைக்க விரும்பவில்லை.

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு | Uk Millionaire Plans Donate All Wealth When DiesGetty

“குழந்தைகள் கடினமாக உழைக்க வேண்டியது மிகவும் முக்கியம், ஏனென்றால் வெற்றிகரமான மற்றும் பணக்காரர்களாக மாறிய பலரை நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் தங்கள் குழந்தைகளைக் கெடுக்கிறார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றிய புரிதல் இல்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்க்கையில் கடுமையாக உழைத்ததாகவும், ஒரே நேரத்தில் மூன்று வேலைகளைச் செய்ததாகவும் கூறினார். அதைத்தான் அவர் தனது குழந்தைகள் செய்ய விரும்புகிறார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.