ஊட்டியில் இளம் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பார்ன்ஹில் பகுதியில் ஒரு விவசாயி மதியம் இரண்டு மணி அளவில் தன்னுடைய சொந்த டிராக்டரில் ஊட்டி நகருக்கு வந்திருக்கிறார். தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பி கொண்டு கோத்தகிரி சாலையில் இருக்கும் ஒரு கடையில் டீ குடித்துள்ளார்.
அப்போது, ஒரு நபர் திடீரென வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு லாட்ஜில் மேனேஜராக இருப்பதாகவும், அங்கே இளம் பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வருவதாகவும் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் முதல் 2000 வரை செலவாகும் என்றும் எந்த தொந்தரவும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பீர்கள் என்றும் ஆசையாக பேசி உள்ளார்.
இதனை தொடர்ந்து சபலம் அடைந்த அந்த விவசாயி மேனேஜருடன் சென்றுள்ளார். அங்கே சென்றதும் குற்ற உணர்ச்சி அடைந்த விவசாயி கையில் பணம் குறைவாக இருப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சையத் அலி, அபுதாஹீர் சித்திக், ரகுபதி உள்ளிட்ட மூன்று பேரை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.