லாஸ்ஏஞ்சல்ஸ்: பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸை காதலித்து மணந்தார். இந்த தம்பதியின் மகள் மால்டி மேரிக்கு தற்போது ஒரு வயது ஆகிறது. தனது மகளின் முகத்தை இதுவரை வெளியே காட்டாமல் இருந்த பிரியங்கா சோப்ரா, தற்போது முதன் முறையாக தனது மகளின் முகத்தை பொதுவெளியில் காட்டியுள்ளார். க்யூட்டான அந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது பற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, ‘மகளின் முகத்தை காட்டக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. அவள் ஒரு வயதுக்கு வந்த பிறகு போட்டோ எடுத்தால் போதும். இப்போது வேண்டாம் என எனது குடும்பத்தார் சொன்னார்கள். மேலும் அவள் பிறந்தபோது, பலவீனமாக இருந்தாள். அவளுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் தர வேண்டியிருந்தது. அதையெல்லாம் மனதில் வைத்துதான் அவளது முகத்தை உலகத்துக்கு காட்டவில்லை. இன்னும் ஒரு வருடம் அவளது வளர்ப்பிலே கவனம் செலுத்தப்போகிறேன். அவள் கொஞ்சம் வளர்ந்த பிறகே நடிப்புக்கு திரும்புவேன். அதுவரை நடிப்பிலிருந்து ஒதுங்கி இருப்பேன்’ என்றார்.