
ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடக்கிறது. இதற்காக அங்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி. அப்போது ரசிகர் ஒருவர் அவர் அருகில் சென்று ‛லவ் யூ தலைவா' என்றார். இதற்கு ரஜினி, ‛‛போய் ஒழுங்கா வேலைய பாரு'' என்று அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தார். ரஜினியின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.